வடமாகாண சுகாதார அமைச்சரால் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்

மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டிவிரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் நேற்றைய தினம் இலவசமாக வாசிப்பு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளார்.

பண்டிவிரிச்சான் ஆலய பகுதியில் வைத்து தேவையுடையவர்களுக்கு வயது அடிப்படையில் இலவசமாக இவ்வாறு மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த பலர் இதன்போது மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்