யாழில் மாபெரும் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி

Report Print Sumi in சமூகம்

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிலையில் கண்காட்சியை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேவேளை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன், அதனை விற்பனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள 150 இற்கும் மேற்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள், சுமார் 50 இற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களில் தமது உற்பத்திகளை இந்த கண்காட்சியின் போது சந்தைப்படுத்தியுள்ளனர்.

இதில், மத்திய வங்கியின் வட மாகாண பிராந்திய பணிப்பாளர் ஆர்.சிவதீபன் யாழ். மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் மற்றும் பெருமளவான பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்