மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேருக்கு கலசம்பூட்டும் நிகழ்வு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலயத்தில் அமைக்கப்பட்டுவரும் கிழக்கு மாகாணத்தின் சித்திரத்தேருக்கான கலசபீடம் பூட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலய வளாகத்தில் 39 அடி உயிரத்தில் இந்த சித்திரத்தேர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான கலசபீடம் பூட்டும் நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அடியார்களின் பங்களிப்புடனும், தனவந்தர்களின் பங்களிப்புடனும் அமைக்கப்பட்டுவரும் இந்த தேர் நிர்மாணப்பணிக்கு உதவ விரும்புவோர் ஆலய பரிபாலனசபையுடன் தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்