நாட்டின் சுபீட்சத்துக்காக ஒரு லட்சம் காவி வஸ்திரங்கள் அன்பளிப்புப் பூஜை

Report Print Aasim in சமூகம்

நாட்டின் சுபீட்சம் மற்றும் அமைதி, வளம் கொழிக்கும் விவசாயம் என்பவற்றை இலக்காகக் கொண்டு ஒரு லட்சம் காவி வஸ்திரங்களை அன்பளிப்புச் செய்யும் பூஜை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 30 ம் திகதி முதல் ஜூன் மாதம் 30ம் திகதி வரையான இரண்டு மாத காலப்பகுதிக்குள் இப்பூஜைக்குத் தேவையான காவி வஸ்திரங்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படவுள்ளது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட காவி வஸ்திரங்களை ஜூன் 30ம் திகதி அநுராதபுரம் ருவன் வெலிசாய மகா விகாரைக்கு பூஜை செய்யப்படவுள்ளது.

பின்னர் நாட்டில் உள்ள ஒவ்வொரு பௌத்த துறவிக்கும் மூன்று காவி வஸ்திரங்கள் வீதம் அன்பளிப்புச் செய்யப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து விகாரைகளிலும் விசேட பௌத்த வழிபாடுகள் மற்றும் சமய அனுட்டானங்களை மேற்கொள்ளவும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்கவும், அமைதி மற்றும் வளம் கொழிக்கும் விவசாய உற்பத்திகளை பெறவும் இவ்வாறான மத அனுட்டானங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை பௌத்த சாசன அமைச்சுடன் இணைந்து கமநல சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மேற்கொண்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers