தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளரின் 19ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்
189Shares
189Shares
lankasrimarket.com

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிருஸ்ரி குகராஜாவின் 19வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, அன்னாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், தமிழ் ஈழ விடுதலை இயக்க முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்