மன். புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை உயர் தர கலைபிரிவு மாணவர்களின் ஓவிய கண்காட்சி

Report Print Ashik in சமூகம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் உயர்தரத்தில் சித்திரத்தை பிரதான பாடமாக கற்கும் மாணர்களின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஓவியக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆசிரியர்களான அன்ரனி தாஸ், காயத்திரி மற்றும் சுமதி ஜெயதாசன் ஆகியோரது ஒத்துழைப்புடன் இந்த ஓவியக்கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின், உயர்தர கலை பிரிவு மாணவர்களான ஜே.கிளின்டன் டலிமா, வி.என்.கிறிசாந்தன், அந்தோன் கிசான், என்.அஸ்மீன், ஜி.ஜெருசன், என்.பவித்திரன் ஆகிய ஆறு மாணவர்களின் சுய ஆக்கங்கள் இந்த ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த கண்காட்சியில் சமூக வாழ்வியலை மையமாகக்கொண்டு சுமார் 100இற்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், மன்னார் வலய கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியன், மன்னார் வலய கல்வி பணிமனையின் உதவி உடற்கல்வி பொறுப்பதிகாரி பி.எம்.எம்.சில்வா மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்