பிரபல பாடசாலை ஒன்றின் 42 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Aasim in சமூகம்
200Shares
200Shares
ibctamil.com

கொழும்புக்கு அருகே இருக்கும் பிலியந்தலை பிரதேச பாடசாலையொன்றின் 42 மாணவர்கள் திடீரென்று ஒவ்வாமையினால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலயத்தில் 07ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக பெற்றோரின் உதவியுடன் பாடசாலை நிர்வாகத்தினால் பிலியந்தலை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து நேற்று மாலை 38 மாணவர்கள் ஓரளவு குணமான நிலையில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

நான்கு மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்