அம்பாறையில் கடும் வெப்பம்: பெருமளவான மக்கள் பாதிப்பு

Report Print Mubarak in சமூகம்

அம்பாறையில் அதிக வெப்பமான காலநிலை கடந்த ஒரு மாதமாக நிலவுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பல்வேறு நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் பலர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் இரண்டு மாதங்களாக இந்த பகுதியில் மழைவீழ்ச்சி கிடைக்காமையால் நீர் நிலைகள் வற்றியுள்ளது.

வெப்பமான காலநிலை அதிகரித்தமையால் ஏற்பட்ட புழுதிப்படலம் மனித சுவாசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தோல் நோய்களும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. மக்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள கீரைவகைகள், வெள்ளரி, நீர் பூசணி, இளநீர் போன்ற பல பொருட்களை கூடுதலாக கொள்வனவு செய்வதால் இவற்றின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்