முல்லைத்தீவில் மகாத்மா காந்தியின் பிறந்த தின நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

மகாத்மா காந்தியின் பிறந்த தின நிகழ்வு முல்லைத்தீவு நகரில்அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவுத்தூபியில் நடைபெற்றுள்ளது.

இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத்தூதரகத்தின் உயர் அதிகாரி எஸ்.நிறஞ்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் இரவீந்திரன் மற்றும் கெங்காதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, மகாத்மா கந்தியின் சிலைக்கு மலர் மாலை தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து நகரில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியன் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

மேலும், மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த வயோதிபர்கள் 100 பேருக்கு உடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers