42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து மாதா ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மூன்றாவது ஆண்டாகவும் யேசுப்பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அருட்தந்தை லோறன்ஸ் நிக்லஸ் அடிகளாரினால் விசேட பூஜை நடாத்தப்பட்டுள்ளது.

காண்போரை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தினை பெருமளவான மக்கள் வருகை தந்து கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்