கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றுள்ள கால்கோள் விழா

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி கல்வி வலயத்தில் இவ்வருடத்தில் தரம் ஒன்றுக்கு சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று 67 பாடசாலைகளில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன் போது, தரம் ஒன்றுக்கு புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் மாலை அணிவித்து அழைத்து வந்துள்ளனர்.

பின்னர் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் மாணவச் சிறார்களின் கல்வி செயற்பாடுகளுக்கு ஆசி வழங்கியுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்