முல்லைத்தீவில் கொண்டாடப்பட்ட 71வது சுதந்திர தின கொண்டாட்டம்!

Report Print Mohan Mohan in சமூகம்

இலங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்றுள்ளன.

மாவட்டசெயலக வளாகத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நகர்ப்பகுதியில் இருந்து அழைந்து வரப்பட்ட விசேட அதிதிகள் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர தின நிகழ்வை இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்துவைத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத தலைவர்களது ஆசி உரைகளும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மத தலைவர்கள் முப்படை அதிகாரிகள் பொலிஸ் பொறுப்பதிகாரி, அரச திணைகள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் கிராமசேவையாளர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்