முல்லைத்தீவில் இன்று அதிகளவிலான வெப்பம்! அச்சத்தில் மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் இன்றைய தினம் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுவதனால் பொதுமக்களின் இயழ்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர்பகுதி மற்றும் அளம்பில், கொக்கிளாய், உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று முற்பகல் 11.30 மணி வரை 34 பகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகின்றது.

மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இலங்கையின் பல பகுதிகளில் அதிகளவிலான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

குறித்த அறிவித்தல் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 32 முதல் 41 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...