திருகோணமலையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்களுக்கு கௌரவிப்பு விழா

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் முதல் தடவையாக ஜனாதிபதி சட்டத்தரணியாகவும், கலாநிதிப் பட்டம் பெற்றவர்களையும் கெளரவிக்கும் விழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியின் அப்துல் மஜீது மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது பிரதம விருந்தினராக ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் .ஏ.எல்.எம்.லாபீர் மற்றும் அரசாங்க சட்டத்தரணி ஹனிப்பு லெப்பை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவி ஏற்ற சட்டத்தரணி ஏ.டபிள்யூ.ஏ. சத்தார்னை ஜோர்தான் நாட்டு இலங்கைக்கான தூதுவர் பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளார்.

அதே போன்று கலாநிதிப் பட்டம் பெற்ற மெளலவி ஏ.ஆர்.நஸார், எச் எம்.குசைன் மற்றும் தாரிக் போன்ற பத்துப் பேர் இதன்போது கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்