வீழ்ச்சி கண்டுள்ள முருங்கைக்காய் விலை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, கிண்ணியாவில் முருங்கைக்காய் உற்பத்தி அறுவடை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் முருங்கைக்காயின் விளைச்சல் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதங்களில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காய் 150ரூபாய் தொடக்கம் 100ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ முருங்கைக்காய் 70 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பட்டு, தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, பெறியாற்றுமுனை, முனைச்சேனை, கச்சக்கொடுத்தீவு, பூவரசன்தீவு மற்றும் பெரிய கிண்ணியா ஆகிய இடங்களில் முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.

மூதூர், தோப்பூர் பிரதேசத்திலும் முருங்கைக்காய் தற்போது அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கிண்ணியாவிலிருந்து ஒரு நாளைக்கு 10,000 தொடக்கம் 20,000 கிலோ கிராம் முருங்கைக்காய் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் முருங்கைக்காயின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்