யாழ்ப்பாணத்தில் ஆழங்கட்டி மழை! மகிழ்ச்சியில் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று பெய்த இடியுடன் கூடிய மழையின் போது ஆழங்கட்டி மழையும் பெய்துள்ளது.

1.45 மணியளவில் ஆரம்பித்த மழை ஒன்றரை மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து பெய்துள்ளது. இதன்போது ஆழங்கட்டிகளும் விழுந்துள்ளன.

குறித்த பகுதியில் பாரிய மின்னல் தாக்குதல்களும் ஏற்பட்டுள்ளது. இதன்போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 52 நாட்களுக்கு பின்னர் அடைமழை பெய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆழங்கட்டியையும் அவதானிக்க முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers