மஸ்தான் எம்.பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Report Print Theesan in சமூகம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் ஐந்து விளையாட்டு கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் அ.கஜன் தலைமையில் செக்கட்டிப்புலவு கிராம சேவகர் பிரிவில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் வெ.மகேந்திரன் மற்றும் விளையாட்டு கழகங்களை சேர்ந்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 38 விளையாட்டு கழகங்களிற்கு ஒரு மில்லியன் ரூபா நிதியில் விளையாட்டு உபகரணங்கள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாகவே இன்று தெரிவு செய்யப்பட்ட ஐந்து விளையாட்டு கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers