குண்டு தாக்குதலினால் உயிர் நீத்த உறவுகளுக்கு சுவிஸில் அஞ்சலி!

Report Print Dias Dias in சமூகம்

இலங்கையில் தொடர் குண்டு தாக்குதலினால் உயிர் நீத்த புனித ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு சுவிஸ் - பேண் நகரில் மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சமூகநலன் செயற்பாட்டாளர்கள், ஆன்மீகத் தொண்டர்கள்,தமிழ் வர்த்தகர்கள்,முன்னாள் போராளிகள் பன்னாட்டுச் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன்போது வேற்று நாட்டுப் பெண்மணி ஒருவர் உயிர் நீத்த எமது அப்பாவி உறவுகளை எண்ணி கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்