100 இற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் 3 மட்டுமே பதிவு

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் 100 இற்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு, நகரசபைக்கு வருடா வருடம் தொழில் வரி செலுத்தி வருவதாக நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறியும் சட்டத்தினூடாக நகசரபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையங்களின் விபரங்களை கோரிய போதே இவ்வாறு நகரசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,

வவுனியா நகரில் 100இற்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்ற நிலையில் பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு நகரசபைக்கு தொழில் வரி செலுத்தி வரும் தனியார் கல்வி நிலையங்களாக மூன்று நிலையங்கள் மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

நகரில் இயங்கும் பல தனியார் கல்வி நிலையங்களை அரச சேவையிலுள்ள ஆசிரியர்களே இயக்குநர்களாக வழிநடத்தி வருகின்ற நிலையில் அரச சட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகம், நகரசபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட தவறியுள்ளதையே இவ்விடயம் எடுத்துக்காட்டி நிற்கின்றது.

மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை தமது தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.

வசதிகளற்ற நிலையங்களை அமைத்து மாணவர்களிடம் பணம் கறக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வரும் கல்வி நிலையங்களை நடத்தி வரும் தனியார் கல்வி நிர்வாகத்தினர் நகரிலுள்ள சட்டதிட்டங்களை பின்பற்றத் தவறியுள்ளனர்.

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் செயற்படும் 100இற்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் குறித்த மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செயலகத்தில் பதிவு செய்து, அனுமதியை பெற்று ஒவ்வொரு வருடமும் நகரசபையில் தொழில் வரியினை மாத்திரம் செலுத்தி வருவதாக நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்