இலங்கையில் உயர் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Report Print Nivetha in சமூகம்

இலங்கையில் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் குறித்த திட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

மேலும், இந்த திட்டத்திற்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த திட்டம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்