மன்னார் - முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத் திருவிழா

Report Print Ashik in சமூகம்

மன்னார் - முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத் திருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

திருவிழா திருப்பலியினை வண.பிதா கிறிஸ்துநாயகம் அடிகளாரின் தலைமையில் குருக்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்துள்ளனர்.

ஆலய பங்குத்தந்தை வண.பிதா லோறன்ஸ் அடிகளாரின் வழிநடத்தலின் கீழ் கடந்த 9 நாட்களாக திருப்புகழ் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது.

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பரலோக அன்னையின் திருச்சொரூப பவனியும், ஆசியும் வழங்கப்பட்டது.

இத்திருவிழாவில் பங்குதந்தை, பங்கு மக்கள், குருக்கள், கன்னியர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்