வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய வருடாந்த பொங்கல் விழா

Report Print Theesan in சமூகம்

வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பெரும் சர்ச்சைகள் நிறைந்த வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெங்கல் விழா இன்று ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழா இடம்பெற்று 13ம் திகதி பௌர்ணமியுடன் நிறைவுபெறவுள்ளது.

நெடுங்கேணி பொலிஸார் ஆலயத்தின் திருவிழாவின் போது பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஒலிபெருக்கி பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்திற்கு செல்லும் வீதி செப்பனிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கழிவுப்பொருட்களை எரிப்பதற்கும்,தேவையின் பொருட்டு மரங்களில் தடிகளை வெட்டவும் அனுமதி அளிக்கப்படவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு தொல்பொருள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் பல தடவைகள் வருகை தந்து பொங்கல் நிகழ்வினை பார்வையிட்டு செல்வதாகவும், இது அங்கு வருகை தரும் பக்கதர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்