வட மாகாண நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள வவுனியா பாடசாலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி நாடகப் போட்டியில் வவுனியா - அல் இக்பால் மகா வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

மாணவர்களின் ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யும் நோக்கில் வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விசேட கல்வி செயற்திட்டமாக ஆங்கில மொழியிலான நாடகப் போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலயத்தில் இன்று நாடகப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பனவற்றை பாடசாலையின் அதிபர் ஏ.கே. உபைத் வழங்கி வைத்துள்ளார்.

நாடகங்களில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்ட அல் இக்பால் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ரி.எம்.சபீக்கிற்கு வெற்றிக் கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்