புதிய தொழில்நுட்பக்கூடம் எம்.ஏ.சுமந்திரனால் திறந்து வைப்பு

Report Print Rakesh in சமூகம்

யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பக்கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கல்லூரி அதிபர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றிருந்ததுடன், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு கூடத்தை திறந்து வைத்துள்ளார்.

குறித்த தொழில்நுட்பக்கூடம் 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் என்.நந்தகுமார், பருத்தித்துறை நகர பிதா யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You May Like this Video


மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்