புதுக்குளம் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - புதுக்குளம் பகுதியில் இன்று டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது.

புதுக்குளம் கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் மாணவர்களின் நடிப்புத் திறன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீதி நாடகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான காரணம் மற்றும் நுளம்புகளை எவ்வாறு அழித்தொழிக்கலாம் என்ற விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன், டெங்கு நுளம்புகளை அழிப்போம் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்