ஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த சுர்ஜித் - சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்

Report Print Vethu Vethu in சமூகம்

தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த இரண்டு வயது சிறுவனின் மரணம் உலக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா மாத்திரமன்றி இலங்கையிலும் பல்வேறு பகுதிகளில் சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் சுர்ஜித் உயிரிழப்பை அடுத்து தென்னிலங்கையிலுள்ள சிங்கள குடும்பம் ஒன்று அஞ்சலி செலுத்தியுள்ளது.

இனவாத ரீதியாக செயற்பட்டு வரும் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்நாட்டில் உயிரிழந்த சிறுவனுக்காக அஞ்சலி செலுத்தியமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் 4 நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்