பசுமையான நாடு எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

Report Print Navoj in சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'பசுமையான நாடு' திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களுக்கான மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலைய முன்றலில் இன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக சங்கத் தலைவர் இஸட்.ஏ.இனாயத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நான்கு சமய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, நகரசபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது எமது நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் கடந்து விட்டதை குறிக்கும் முகமாக 72 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்