உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு கண்டியில் நினைவேந்தல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு மத்திய மாகாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று காலை விளக்குகளை ஏற்றி அஞ்சலித்தார். அத்துடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மாகாண ஆளுநர், கடந்த ஆட்சியின் கீழ் இந்த தாக்குதல்கள் பற்றிய விசாரணைகள் முறையாக நடத்தப்படவில்லை.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முறையாக இந்த விசாரணைகளை நடத்த கட்டளையிட்டிருக்கின்ற நிலையில் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்