அனைத்துலக வழக்கறிஞர் மாநாட்டில் கௌரவிக்கப்பட்ட சீமான்

Report Print Dias Dias in சமூகம்
118Shares
118Shares
lankasrimarket.com

சென்னையில் இடம்பெற்ற பன்நாட்டு வழக்கறிஞர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையமும், ஈழத் தமிழர் ஆதரவு வழக்கறிஞர் கூட்டமைப்பும் ஒருங்கிணைந்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் இலக்கோடு குறித்த மாநாட்டை நடத்தியிருந்தனர்.

குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் நினைவு சின்னத்தை, மனித உரிமை செயற்பாட்டாளரும் மாநாட்டின் ஆலோசகருமான சண் மாஸ்டர், சீமானுக்கு வழங்கி மதிப்பளித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்