ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி: அத்தனையும் இவருக்காகத்தானாம்!

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் என்ற சொல்லை இந்த உலகத்தில் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு கணணித்துறையிலும், மொபைல் சாதன துறையிலும் கொடி கட்டிப் பறக்கின்றது.

இந்த நிறுவனம் தற்போது Designed by Apple in California எனும் புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இப் புத்தகமானது கடந்த 20 வருட காலத்தில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த சாதனங்கள் தொடர்பான தகவல்களை தாங்கியதாகக் காணப்படுகின்றது.

மேலும் இப் புத்தகத்தினை ஆப்பிள் நிறுவனத்தினை நிறுவியவரும், அதன் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருந்தவருமான மறைந்த Steve Jobs அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 1976ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி Steve Jobs இனால் நிறுவப்பட்டது.

இவ்வாறு நிறுவப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் புத்தகத்தினை 199 - 299 டொலர்களுக்கு இடைப்பட்ட பெறுமதியில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments