கூகுள் நிறுவனத்துடன் பனிப்போரை ஆரம்பித்தது மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தொழில்நுட்ப உலகில் பல்வேறு நிறுவனங்கள் ஏட்டிக்கு போட்டியாக வளர்ந்துள்ளன. எனினும் சில சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தின் உற்பத்திகளை மற்றைய நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.

இதனால் சுமுகமான உறவினைப் பேணுவதற்கு குறித்த நிறுவனங்கள் விரும்பும். ஆனால் இதனையும் தாண்டி போட்டிகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல.

இவ்வாறே தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு இடையில் பனிப்போர் ஆரம்பித்துள்ளது.

அதாவது தற்போது வரைக்கும் மைக்ரோசொப்ட்டின் இயங்குதளமான விண்டோஸில் கூகுள் நிறுவனத்தின் குரோம் இணைய உலாவியினை பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள Windows 10 S இயங்குதளத்தில் குரோம் உலாவியை பயன்படுத்த முடியாது.

மைக்ரோசொப்ட்டின் இந்த முடிவானது தனது Internet Explorer இணைய உலாவிக்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக மேற்கொண்டதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments