அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ஜெரோம் தெரிவு

Report Print Fathima Fathima in நிறுவனம்

அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக ஜெரோம் பவலை ஜனாதிபதி டிரம்ப் நியமித்துள்ளார்.

தற்போதைய தலைவரான ஜேனட் யெல்லனின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரியுடன் முடிவுக்கு வரும் நிலையில் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெரோம் மிக திறமைசாலி என புகழாரம் சூட்டியுள்ள டிரம்ப், பொருளாதாரத்துக்கு தேவையான கடினமாக முடிவுகளை துணிச்சலுடன் மேற்கொள்ளக்கூடியவர் என தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சியை சேர்ந்த ஜெரோம், 2012ம் ஆண்டு முதல் மத்திய வங்கியின் ஆளுநர் குழுவில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்