Just Dial நிறுவனத்தை வாங்குகிறதா கூகுள்?

Report Print Gokulan Gokulan in நிறுவனம்
11Shares
11Shares
lankasrimarket.com

இந்தியாவை சேர்ந்த Just Dial நிறுவனத்தை கூகுள் வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிறுவனத்தை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இரு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டால் கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் மிகப்பெரிய கையகப்படுத்தலாக இது இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான பின்னர் Just Dial நிறுவனத்தின் பங்குகள் 20 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டது.

Just Dial நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 2 கோடி நிறுவனங்களில் தகவல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்