ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

Report Print Deepthi Deepthi in நிறுவனம்
45Shares
45Shares
lankasrimarket.com

ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாயில் பயணம் செய்வதற்கான சலுகையை அறிவித்துள்ளது.

மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, ‘பிக் சேல் ஸ்கீம்’ என்ற இத்திட்டத்தில் குறைந்த பட்ச அடிப்படை கட்டணமாக ரூ.99 (வரிகள் இல்லாமல்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை இருக்கும் நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

இதற்கான முன்பதிவு 13 ஆம் திகதி தொடங்கி இம்மாதம் 19-ம் திகதியுடன் முடிவடைகிறது.

99 ரூபாய் அடிப்படை கட்டணமான நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விமான நிலைய வரி மற்றும் ஜி.எஸ்.டி சேர்த்து உங்களது பயன கட்டணத்தில் வசூலிக்கப்படும்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஒரிசா மாநிலம் புபனேஷ்வருக்கு 466 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புபனேஷ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு 507 ரூபாயும், ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு 571 ரூபாயும், கொச்சியிலிருந்து பெங்களுரூவுக்கு 764 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நகரங்களுக்கான கட்டண விபரங்கள் ஏர் ஏசியா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் எனவும், முன்பதிவு செய்து விட்டால் எந்த காரணத்திற்காகவும் பயணதொகை திரும்ப அளிக்கப்பட மாட்டாது எனவும் விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்