ஆப்பிள் இந்திய நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்தது: காரணம் இதுதான்

Report Print Printha in நிறுவனம்
83Shares
83Shares
ibctamil.com

ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது குறைவான வருவாய் வளர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முந்தைய 2015-16 நிதியாண்டில் ஆப்பிள் இந்தியா 53% வருவாய் வளர்ச்சியையும், 2017 நிதியாண்டில் ரூ.11,618.7 கோடி வருவாய் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

இந்த ஆப்பிள் நிறுவனத்தின் குறைவான வருவாய் வளர்ச்சிக்கு ஐபோன் 8, ஐபோன் X மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இருக்கலாம்.

இத்துடன் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் மதிப்பிழக்கம் செய்யப்பட்டதும், ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை குறைய முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்பது தெரிவந்துள்ளது.

அதனால் அடுத்து வரும் நிதியாண்டுகளில் ஐபோன்களின் விற்பனை 35 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையில் ரூ.30,000 பட்ஜெட் சாதனங்கள் 3% அளவு மட்டும் தான்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 35 சதவிகித பங்குகளுடன் முன்னணி இடத்தில் உள்ளது.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முறையே 32 மற்றும் 31 சதிவிகித பங்குகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்