நோக்கியா மற்றும் ஹுவாவி நிறுவனங்களிடையே ஒப்பந்தம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
48Shares
48Shares
ibctamil.com

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான ஹுவாவி ஸ்மார்ட் கைப்பேசி உலகில் கொடிகட்டிப் பறக்கின்றது.

இவ்வாறான நிலையில் நோக்கியா நிறுவனத்துடன் காப்புரிமை ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பரந்த அளவில் நோக்கியாவின் காப்புரிமையை பயன்படுத்தும் நோக்கில் அமைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறெனினும் இந்த ஒப்பந்தம் எவ்வளவு தொகைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இரகசியம் பேணப்பட்டு வருகின்றது.

எனினும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தகவலை நோக்கிய நிறுவனத்தின் தலைமை சட்ட அதிகாரியான Maria Varsellona உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்