2030ஆம் ஆண்டுக்குள் மின்சார கார்கள் சாத்தியமில்லை: பிரபல கார் நிறுவனம் அறிவிப்பு

Report Print Kabilan in நிறுவனம்

மின்சார கார்களின் அறிமுகம் 2030ஆம் ஆண்டுக்குள் சாத்தியமில்லை, என்று பிரபல கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து மெர்சிடீஸின் தலைமை நிர்வாகி ரோலண்ட் போல்கர் கூறுகையில், ‘மின்சாரக் கார்களை தயாரிப்பதற்கான காலக்கெடுவை அரசு நிர்ணயித்ததின் எதிரொலியாக,

முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய ரக கார்களை, உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், ஆட்டோ மொபைல் உற்பத்தியைப் பொறுத்தவரை, புதிய வாகனங்களை வடிவமைக்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும்.

மேலும், மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு தற்போது நிர்ணயித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவு. இதன் காரணமாக, 2040ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் முழுவதும் ஹைட்ரஜன் கார்கள் மட்டுமே இயக்கும். மின்சார கார்களுக்கான தேவைகள் அப்போது இருக்காது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்