விற்பனையில் சாதனை படைத்த ஆப்பிள் ஆப் ஸ்டோர்

Report Print Kabilan in நிறுவனம்
80Shares
80Shares
ibctamil.com

பிரபல வணிக நிறுவனமான ஆப்பிள் இந்த புத்தாண்டில் ’ஆப்பிள் ஆப் ஸ்டோர்’ மூலமாக ரூ.1,900 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

ஆப்பிள் ஆப் ஸ்டோர் கடந்த 2008 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜனவரி 1ஆம் திகதி ஆப்பிள் பயனாளிகள், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் செயலி மற்றும் விளையாட்டுகளை வாங்கியது, பதிவிறக்கம் செய்ததன் மூலம் ரூ.1,900 கோடி வருமானத்தை ஆப்பிள் நிறுவனம் அடைந்துள்ளது.

இதுதான் ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்டதில் இருந்து ஈட்டப்பட்ட அதிகப்படியான வருமானம் ஆகும்.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பில் சில்லர் கூறுகையில், புதிய ஆப் ஸ்டோருக்கு ஆப்பிள் பயனாளிகள் அளிக்கும் வரவேற்பைக் காண சிலிர்ப்பாக உள்ளது.

புதிய செயலிகள் மற்றும் விளையாட்டுகளை பயனாளிகள் ரசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஆப்பிள் இயங்குதள மேம்பாட்டாளர்கள் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும், 2017ஆம் ஆண்டில் மட்டும் 30 சதவிதம் அதிகமாக சம்பாதித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

நவீன வசதிகளுடன் வெளியான ‘போகிமான் கோ’ விளையாட்டு, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்