வேலையாட்கள் இல்லாத பல்பொருள் அங்காடி: அசத்தும் அமேசான்

Report Print Kabilan in நிறுவனம்
56Shares
56Shares
ibctamil.com

பிரபல வணிக நிறுவனமான அமேசான், பல்பொருள் அங்காடியில் வாடிக்கையாளர்கள் பொருட்களை சிரமமின்றி வாங்க புதிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பணியாளர்கள் இல்லாமல், ரசீது சீட்டு வாங்க வரிசையில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வழிவகை செய்துள்ளது.

கடந்த ஓர் ஆண்டாக, அமேசான் கோ பல்பொருள் அங்காடி இதற்கான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அங்காடியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கமெரா, வாடிக்கையாளர்களை அடையாளம் காணும்.

மேலும், அவர்கள் வாங்கும் பொருட்களையும், திரும்ப வைக்கும் பொருட்களையும் பதிவு செய்து கொள்ளும்.

அதன் பிறகு, வாங்கிய பொருட்களுக்கான பணத்தை, வாடிக்கையாளர் கடையை விட்டுப் போகும்போது அவர்களின் Credit Card-யில் இருந்து எடுத்துக்கொள்ளும்.

முதலில் வாடிக்கையாளர்கள் அமேசான் கோ என்ற செயலி மூலமாக Scan செய்து கொள்ள வேண்டும். பொருட்கள் இருக்கும் அலமாரிகளில் Censors பொருத்தப்பட்டிருப்பதால், அவை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பொருளை, இனம் கண்டு பட்டியலில் சேர்க்கும்.

அதே போல, பொருளை வாங்காமல் திரும்ப வைத்து விட்டால், பட்டியலில் இருந்து அந்த பொருளின் பெயரை நீக்கி விடும்.

இந்த முறையின் மூலமாக, வாடிக்கையாளர்கள் Bill போட வரிசையில் நிற்க தேவையில்லை. இந்த புதிய முயற்சியின் மூலம், விரைவில் அங்காடி பொதுமக்களுக்காக திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காணுவதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், அதிக நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை என்பதாலும், அதிவேகமாக பொருட்களை வாங்கும் அனுபவத்தை தருவதாலும், அமேசான் கோ நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்