கடந்த வருடம் கூகுள் எதிர்நோக்கிய இக்கட்டான நிலைமை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
6Shares
6Shares
ibctamil.com

அன்ரோயிட் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களை தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.

பிளே ஸ்டோரில் தமது அப்பிளிக்கேஷன்களை இலவசமாக அப்லோட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு தீங்கு விளைவிக்கும் அப்பிளிக்கேஷன்கள் உட்பட போலியான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றன.

கடந்த 2017ம் ஆண்டில் இவ்வாறான 7,00,000 அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.

தவிர கொள்கைகளுக்கு கீழ்ப்படியாது அப்பிளிக்கேஷன்களை உருவாக்கிய 1,00,000 டெவெலாப்பர்களையும் நீக்கியுள்ளது.

இந்த எண்ணிக்கையானது 2016ம் ஆண்டு நீக்கப்பட்ட அப்ளிக்கேஷன்களின் எண்ணிக்கையிலும் பார்க்க 70 சதவீதம் அதிகமானது என கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்