45 வயதிற்கு மேற்பட்டோரே இங்கு பணிபுரிய முடியுமாம்: எங்கு தெரியுமா?

Report Print Kabilan in நிறுவனம்
68Shares
68Shares
ibctamil.com

ரஷ்யாவில் ‘Oldushka' எனும் மொடலிங் நிறுவனம், 45 வயதுக்கு மேற்பட்டோரையே தங்களின் நிறுவனத்திற்கு மொடல்களாக தெரிவு செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மொடலிங் துறையில் எப்போதும் இளைஞர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். அதுவும், அவர்களின் ஓய்வு காலம் பெரும்பாலும் 30 வயதிலேயே முடிந்து விடும்.

ஆனால், ரஷ்யாவில் உள்ள ‘Oldushka’ எனும் மொடலிங் நிறுவனத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோரே மொடல்களாக இருக்கின்றனர். இங்கு மொடலாக இருக்கும் ரோஸ்டர் எனும் நபருக்கு வயது 85.

இந்நிறுவனத்தை இகோர் கவார் என்பவர் நடத்தி வருகிறார். இவர், ஏற்கனவே ஒளிப்படக்காரராக இருந்தவர். இயற்கையின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது நிறுவனத்தில் வயதான மொடல்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

அதன்படி, தற்போது இவரின் நிறுவனத்தில் 45 வயதில் இருந்து 85 வயது வரை, 18 மொடல்கள் வேலை செய்து வருகின்றனர்.

இது குறித்து இகோர் கவார் கூறுகையில், ‘முதலில் 60 வயது மாடல் ஒருவர் தான் எங்கள் நிறுவனத்தில் இளையவராக இருந்தார். ஆனால், 45 வயதான செர்கே, தனது வயதை விட தோற்றத்தில் முதுமையாக தெரிந்ததால், அவரை வேலைக்கு சேர்த்தேன்.

இப்போது அவர் தான் எங்கள் நிறுவனத்தில் இளையவர். வயதாக ஆக அழகு கூடுவதாக நான் நினைக்கிறேன். மேலும், நான் சந்தித்த அழகான முதியவர்களின் முகங்களே, என்னை இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கத் தூண்டியது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்