ஆப்பிளின் அடுத்த கட்ட நகர்வை உறுதிப்படுத்தினார் டிம் கூக்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
57Shares
57Shares
ibctamil.com

சாம்சுங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஒன்லைன் பொருள் கொள்வனவினை இலவாக்கும் வகையில் Samsung Pay, Apple Pay வசதிகளை அறிமுகம் செய்துள்ளன.

இரு நிறுவனங்களும் ஏட்டிக்கு போட்டியாக இச் சேவையினை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்தி வருகின்றன.

இந்நிலையில் Apple Pay சேவையானது விரைவில் பிரேஸிலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் கூக் தெரிவித்துள்ளார்.

எனினும் இச் சேவை பிரேஸிலில் அறிமுகம் செய்யப்படும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை தற்போது இச் சேவையானது Australia, Japan, Taiwan, China, New Zealand, Hong Kong, Singapore, Denmark, Isle of Man, Spain, Finland, Italy, Sweden, France, Jersey, Switzerland, Guernsey, Russia, United Kingdom, Ireland, San Marino, Vatican City, United Arab Emirates, Canada மற்றும் United States ஆகிய நாடுகளில் கிடைக்கப்பெறுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்