பணியாளரினால் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சங்கடமான நிலை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனமானது தனது சாதனங்களையோ அல்லது அவற்றுக்கான இயங்குதளங்களையோ மிகவும் இரகசியமான முறையில் வடிவமைத்து வருகின்றது.

இதன் தொழில்நுட்பங்களை வெளியே கசியிவிடுவதில்லை.

இவ்வாறிருக்கையில் அண்மையில் iOS 9 இயங்குதளத்தினை உருவாக்குவதற்கான குறிமுறைகள் (Source Code Coding) கசிந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஆப்பிள் நிறுவனம் குறிமுறைகளை வெளியிட்டவரை கண்டறிந்துள்ளது.

குறித்த நபர் அங்கு பணியாற்றும் ஒரு கீழ்மட்ட ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது iOS 11 இயங்குதளப் பதிப்பே அதிகளவில் பாவனையில் இருப்பதால் iOS 9 குறிமுறைகள் வெளியானது குறித்து பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்