இதைப் படித்தால் நீங்களும் இங்கு பணிபுரிய விரும்புவீர்கள்

Report Print Kabilan in நிறுவனம்
191Shares
191Shares
lankasrimarket.com

பேஸ்புக் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு தரும் சலுகைகளை அறிந்தால், அங்கு பணிபுரிபவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் வேறு எவரும் இல்லை என்று தோன்றும்.

அமெரிக்காவில் உள்ள சில நிறுவனங்கள், ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், திட்டங்களை மேம்பட்ட முறையில் லாபகரமாக முடிக்கவும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன.

அந்த வகையில் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், வேறு எந்த நிறுவனத்திலும் அளிக்க முடியாத சலுகைகளை அளித்து வருகின்றது.

பேஸ்புக் நிறுவனத்தில் சில நாட்கள் தங்கி வேலை செய்ய நேர்ந்தால், அலுவலகத்திலேயே இலவசமாக Dry Cleaning சேவை வழங்கப்படுகிறது.

தலைமை மையமான மெனலோ பார்க் அலுவலகத்தில், ஊழியர்கள் தங்களது கார்களை parking செய்வதற்கு ஏதுவாக Valet parking மற்றும் Electric கார்களுக்கு இலவசமாக சார்ஜ் செய்யும் தளம் ஆகியவற்றை அந்நிறுவனம் வழங்கிறது.

பேஸ்புக் அலுவலகத்திற்குள்ளேயே, இலவசமாக மருத்துவம் மற்றும் பல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முடி திருத்தம் செய்யும் நிலையமும் அலுவலகத்திற்குள்ளேயே உள்ளதால், முடி வெட்டிக் கொள்ள வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

நாள் முழுவதும் உணவு மற்றும் தின்பண்டங்கள் இங்கு கிடைக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும், எப்போது வேண்டுமானலும் ஊழியர்கள் சாப்பிட முடியும்.

பேஸ்புக், குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு 4,000 டொலர் வரையிலான பணம் தருகிறது. அத்துடன், ‘Egg-Freezing' என்ற கரு முட்டையைப் பாதுகாக்கும் சிகிச்சை மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பதற்கும் நிதியுதவிகளை செய்கிறது.

பேஸ்புக் நிறுவன வளாகத்தின் கட்டிடத்தின் ஒரு அடுக்கு முழுவதும், Video Game விளையாடுவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஊழியர்கள் தங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளவும், வேகமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் விளையாடலாம்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் முழுநேர ஊழியர்கள் அனைவருக்கும், ஓர் ஆண்டிற்கு 21 நாட்களை சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள விடுமுறையாக வழங்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு சம்பளமும் உண்டு என்பது தான் ஆச்சரியம்.

ஊழியர்கள் அனைவருக்கும், உடல்நலத்தினை பேணி காத்துக் கொள்ள Gym Membership முதல் பல ஆரோக்கியமான செயல்களுக்கான சேவைகள், அலுவலகத்திற்குள்ளேயே கிடைக்கின்றது.

ஊழியர்கள் ஆரோக்கியமாக இருக்க சைக்கிள் பயன்படுத்துவது வழக்கம். அதற்காகவே சைக்கிள் Repair கடை ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தால், 4 மாதம் விடுமுறையை சம்பளத்துடன் அளிக்கிறது பேஸ்புக் நிறுவனம். இந்தச் சலுகை குழந்தையைத் தத்தெடுத்தாலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்