அமேசான் நிறுவனத்தில் ரூ.1.3 கோடியை கொள்ளையடித்த இளைஞர்

Report Print Athavan in நிறுவனம்

இந்தியாவில் டெலிவரி பாயாக வேலை செய்யும் இளைஞர் ஒருவர் ரூ.1.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக அமேசான் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சிக்மங்களூரு நகரில் அமேசான் நிறுவனம், தனது பொருட்களை டெலிவரி செய்து பணம் பெறுவதற்கு எக்தந்தா என்ற கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிறுவனத்திலிருந்து அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனத்திலிருந்து ஒரே டேப்லெட் மற்றும் கார்டு ஸ்வைப்பிங் மிஷன் ஆகியவைக் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த எக்தந்தா கூரியரிலிருந்து அமேசானுக்காக டெலிவரி வேலை பார்க்கும் தர்ஷன் என்ற துருவா என்ற 25 வயது இளைஞர் அமேசான் இணையதளம் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்பிலான பொருட்களை நூதன முறையில் அபேஸ் செய்திருக்கிறார்.

சிக்மங்களூரில் உள்ள தனது நண்பர்கள் சிலர் மூலம் அமேசான் இணையதளத்தில் பல விலைமதிப்பு மிக்க பொருட்களை ஆர்டர் செய்யச் சொல்லிய அவர், அவற்றை டெலிவரி செய்யவும் தானே சென்றிருக்கிறார்.

பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தைப் பெறாமலேயே பெற்றுக்கொண்டுவிட்டது போல, அமேசான் நிறுவனத்திற்கு ஒரே மெசேஜை தனக்கு அளிக்கப்பட்ட டேப்லெட் மூலமே செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 7 மாதமாக இந்த சோதனை நடந்து இருக்கிறது, இதன் மூலம் இவர் 1.3 கோடி மோசடி செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்