பிழைகளை கண்டறிந்தால் 2 லட்சம் டொலர்கள்: மைக்ரோசாப்டின் அறிவிப்பு

Report Print Kabilan in நிறுவனம்
45Shares
45Shares
ibctamil.com

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பிழைகளை கண்டறிந்தால் Developer-களுக்கு 2,50,000 டொலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Bug Bounty எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், Meltdown மற்றும் Spectre போன்ற புதிய பிழைகளை கண்டறியும் Developer-களுக்கு 2,50,000 டொலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ‘பல்வேறு புதிய வகையான பிழைகள் ஜனவரி 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இது போன்ற ஆய்வுகளில் மிக முக்கிய வளர்ச்சியாக இருக்கிறது.

அதிகப்படியான அச்சுறுத்தல்கல் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளதால், புதிய வகை பிழைகளை கண்டறிய புதிய ‘Bug Bounty' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

மேலும், Speculative Execution எனும் புதிய வகை பிழைகளை கண்டறிவதற்கான ஆய்வு பணிகள், ஏற்கனவே துவங்கப்பட்டிருக்கலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிலிப் மிஸ்னர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் Intel நிறுவனம் Hacking செய்யக்கூடிய பிழை இருப்பதை உறுதி செய்திருந்தது. இதேபோல பிரச்சனையை ஏற்படுத்தும் பிழைகள் இருப்பதைக் கண்டறிந்த மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், பாதுகாப்பு பேட்ச்சுகளை Update மூலம் வழங்கி வருகின்றன.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்