52 ஆயிரம் கார்களை திரும்பப் பெறும் மாருதி நிறுவனம்: காரணம் என்ன?

Report Print Kabilan in நிறுவனம்
161Shares
161Shares
lankasrimarket.com

மாருதி சுசூகி நிறுவனத்தின் Swift மற்றும் Baleno கார்களில் Brake பிரச்சனை இருப்பதால் எழுந்த புகாரைத் தொடர்ந்து, 52,686 கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் ஆண்டுக்கு பல லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவன தயாரிப்புகளில், அதிகம் விற்பனையாகும் கார்கள் பட்டியலில் Swift தொடர்ந்து முதல் இடம்பிடித்து வருகிறது.

இதே போல Baleno காரும் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2018ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதி வரை, மாருதி நிறுவனம் தயாரித்த Swift மற்றும் Baleno கார்களில் Brake பிரச்சனை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த கார்களை திரும்பப் பெற்று அவற்றை சரி செய்து கொடுப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில்,

மொத்தம் 52,686 மாருதி Swift மற்றும் Baleno கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளோம். கார்களில் தயாரிப்பு பிரச்சனை இருந்தால், வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்தால் அதனை சரி செய்து கொடுக்கும் சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இந்த கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.

வரும் 14ஆம் திகதி முதல் அந்த கார்களில் இருக்கும் Brake பிரச்சனை சரி செய்யப்படும். கார் உரிமையாளர்கள் மாருதி நிறுவனத்தில் காரை கொண்டு வந்து இலவசமாக இந்த சலுகையை பெறலாம்.

மேலும், மாற்றப்படும் உதிரி பாகங்கள் மற்றும் சேவைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்