ஆப்பிள் நிறுவனத்துக்கு 539 மில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு

Report Print Kabilan in நிறுவனம்

காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், சுமார் 539 மில்லியன் டொலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே காப்புரிமை பிரச்சனைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில், காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் இழப்பீடாக ஒரு பில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் கோரியிருந்தது.

இந்த காப்புரிமை விவகாரம், ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் Screen-ஐ சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 548 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில், மீதமுள்ள 399 மில்லியன் டொலர்களை வழங்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை முடிவில் சாம்சங் நிறுவனம் 539 மில்லியன் டொலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது பணத்தையும் தாண்டிய விவகாரம் ஆகும். வடிவமைப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் புதுவித சாதனங்களை வழங்குவதற்கென எங்களது குழுவினர் அயராது உழைக்கின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்