குவால்காம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்குப்பதிவு

Report Print Kabilan in நிறுவனம்
16Shares
16Shares
lankasrimarket.com

அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் குவால்காம் நிறுவனம் மீது ஆப்பிள் காப்புரிமை புகார் மனு அளித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் Auto Focus கமெரா, Mobile Phone மற்றும் Digital Assistant போன்று இயங்கும் சாதனம், Touch Sensitive Displays மற்றும் Circuit Memory உள்ளிட்டவற்றுக்கு காப்புரிமை கோரியிருந்தது.

ஆனால், குவால்காம் பதிவு செய்திருக்கும் நான்கு காப்புரிமைகளிலும் புதிய அம்சங்கள் இல்லாததால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் மனுக்களை மறுசீராய்வு செய்து காப்புரிமை சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும், அதன் பின்னர் குவால்காம் தரப்பு வாதங்கள் பெறப்பட்டு மறுசீராய்வுக்கு பின்னர் தீர்ப்பு வெளியிடப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக சர்வதேச வர்த்தக ஆணையம், குவால்காமின் காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் மீறுவதாக அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு, நான்கு காப்புரிமைகளிலும் ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக குவால்காம் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்