கின்னஸ் சாதனை படைத்த Xiaomi நிறுவனம்: எதில் தெரியுமா?

Report Print Kabilan in நிறுவனம்

Xiaomi இந்தியா நிறுவனம் புதிய உலக சாதனை படைத்து கின்னஸில் இடம்பிடித்துள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi, தங்களது Mi பிரான்டை இந்தியாவில் மேலும் பிரபலப்படுத்தும் வகையில் புதிய முயற்சியை செய்துள்ளது.

அதாவது, உலகின் மிகப்பெரிய மின்விளக்கு மோசேக் லோகோ-வை கட்டமைத்தது. இது 9,690 மின்விளக்குகளால் உருவாக்கப்பட்டது. Xiaomi-யின் Mi லோகோ ஒளிரும் வகையில் இது வடிவமைப்பட்டிருந்தது.

இந்தியாவில் Xiaomi பிரான்டு பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கும் Xiaomi இந்தியா ஊழியர்கள் மற்றும் Mi பிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த லோகோ பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விளம்பர துறையில் Xiaomi-யின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மின்விளக்கு மோசேக் லோகோ, உலகின் மிகப்பெரிய மின்விளக்கு லோகோ என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers